புதலிவராடமைத் தும்பி குயின்ற வகலா வந்துளை கோடை முகத்தலி னீர்க்கியங் கினநிரைப்பின்றை வார்கோ லாய்க்குழற் பாணியி னைதுவந் திசைக்குந் தேக்கமழ் சோலைக்கட றோங் கருஞ்சுரத் தியாத்த தூணித்தலை திறந்தவைபோற் பூத்த விருப்பைக் குழைபொதி குவியிணர் கழறுளை முத்திற் செந்நிலத்துதிர மழைதளி மறந்த பைங்குடிச்சீறூர்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனைப் புயலென வொலிவருந் தாழியருங்கூந்தற் செறிதொடி முன்கை நங்காதலி யறிவஞர் நோக்கமும் புலவியு நினைந்தே”1 |
(அகம்-225) |
இது நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது. |
“வயங்குமணி பொருத” (அகம்-167) என்பது அது. |
உடன் சேறல் செய்கையொடு அன்னபிறவும் மடம்பட வந்த தோழிக்கண்ணும்; அன்னவும் பிற-நீ களவில் தேற்றிய தெளிவகப்படுத்தலுந் தீராத்தேற்றமும் பொய்யாம். செய்கையொடு உடன்சேறல்-அவைபொய்யாகாதபடி செய்கைகளோடே இவளை உடன்கொண்டு செல்க, மடம்பட வந்த தோழிக் கண்ணும்-தன்னறியாமை தோன்றக்கூறிவந்த தோழிக்கண்ணும்; கூற்று நிகழும். |
உடன் கொண்டுபோதன் முறைமையன்றென்று அறியாமற் கூறலின் ‘மடம்பட’ என்றார். செய்கைகளாவன :- தலைவன் |
1. பொருள் : நெஞ்சமே! அன்பும் மடனும் சாயலும் இயல்பும் எலும்பையும் உருக்கும் சொல்லும் பிறவும் ஆகியவற்றுடன் தலைவியோடு ஒத்து ஒருசேர அவளை முயங்கி இவ்விடத்து இன்று உள்ளோம். நாளையோ எனின், வண்டு துளைத்த மூங்கில் துளையில் மேல் காற்றுப் புகுந்து வெளிப்படுதலால் எழும் ஓசை கோவலர் குழல்ஓசை போல் ஒலிக்கும்படியாகவுள்ள தேக்குமரச் சோலைப்பக்கம் உள்ள காடு ஓங்கிய கடத்தற்கரிய சுரவழியில் அம்பறாத்தூணி மூடித்திறந்ததுபோல் உள்ள தழை பொதிந்த இருப்பைப் பூக்கள் நூலறுபட்டுவிழும் முத்துகள்போல் உதிரும் படியான மழைமறந்த சிற்றூரில் கூந்தலும் முன்கையும் உடைய நம் காதலியின் அறிவு கலங்கிய பார்வையையும் புலவியினையும் நினைந்து தனித்துத் தங்கியிருப்போமோ? |