இனி எல்லாயாந் தீதிலேமென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்றுமெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரன் யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும் ஆபோற் படர்தக நாம்”1 |
எனத் தலைவன் கூறியவாறு காண்க. |
காமத்தின் வலியும்-அவள் அது நீத்து நீங்கியவழி முற்கூறியவாறன்றிக் காமஞ் சிறத்தலின் ஆற்றாமை வாயிலாகச் சென்று வலித்துப்புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும் தலைவன் கூற்று நிகழும். |
இதுவுந் துனி தீர்ப்பதோர் முறைமை கூறிற்று. |
உதாரணம் |
“யாரிவனெங் கூந்தல் கொள்வானிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்தெம்மனை வாரனீ வந்தாங்கே மாறு”2 |
(கலி-89) |
என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி, |
“ஏஎயிவை, ஓரூயிர்ப்புள்ளி னிருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவனீகூறியென் னாருயிர் நிற்குமாறியாது”3 |
1. பொருள் : நடுக்கமில்லாத வஞ்சனையாலே வருந்தி என் மகன் மேல் வேட்கை நிகழ நினையாயாய் வந்து, பூண் முலைகளால் நின் மார்போடு பொருத பரத்தை முடியிலிருந்து உதிர்ந்த துகள் சிந்திக் கிடந்த நின் ஆடையது துகளை விளக்கக் காற்றின் எதிரே நின்றாய், இங்ஙனம் நில்லாதே செல்-இது தலைவி கூற்று. |
அது கேட்ட தலைவன், ஏடி! யாம் தீங்குடையேம் அல்லேம் என்று சூளுறவும் அதனைக் கடந்து எம்மிடத்துச் சிறிதேனும் புலந்த நிலைமையில் மீட்சியில்லையாயின் தன் கன்றைக் கட்டியவிடத்தே செல்லும் பசுப்போல நாம் இனி நம்பால் படர்தல் தகும்படி மேம்பட்ட எந் தந்தைக்குப் பெயரனையாம் எடுத்துக் கொள்வோம் என்றான். |
2-3 பொருள்: (தலைவன் கூந்தலைத் தடவினானாக) எங்கூந்தலைப் பிடிப்பான் இவன் யார்? (எனத் தனக்குள்ளே கூறிப் பின்னர் அவனை நோக்கி) இப்படிக் கூந்தலைப் பிடிப்பது பிறர்க்கும் இவ்வாறு உதவி செய்யும் வஞ்சனையையுடையதாகும். அதனால் எம்மனைக்கு வரவேண்டா. வந்தபடியே திரும்பிச் |