பக்கம் எண் :

250தொல்காப்பியம் - உரைவளம்
 

உதாரணம்
 

“மாதருண்கண் மகன் விளையாடக்
காதலிற்றழீஇயினி திருந்தனனே
தாதார் பிரச முரலும்
போதார் புறவினாடுகிழ வோனே”
1

(ஐங்குறு-406)
  

இன்னும் இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.
 

தலைவி செயல்
  

171.

தாய்போற் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலையான.
 

(32)

இளம்
  

இது, தலைமகட்குரியதோர் கிளவி யுணர்த்திற்று.
  

இ-ள்  காமக்கிழத்தி  மாட்டுத் தாய்போற் கழறித் தழீஇக்கோடல் மனைக்கிழத்திக்கும் உரித்து கவவால்
வருத்தமுற்ற காலத்தென்றவாறு. அஃதாவது புலவாவழி என்றவாறு.
*
  

இவ்வாறு கூறுவது தலைமகன் முதிர்ந்தவழி2 என்று கொள்க. உம்மை இறந்தது தழீஇயிற்று.3


1 பொருள் : தேன்   உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் மலர்கள்  நிறைந்த காட்டுநிலத்துக்குரிய தலைவன்,
அன்பிற்குரிய மையுண்ட  கண்ணுடைய தன் புதல்வன் தன்எதிர் விளையாட்டில் மகிழத்தான் காதலுடன்
தலைவியைத் தழீஇ இனிது இருந்தான்.

* தலைவன்  முயங்குங் காலத்துத்  தன்  தவறு  எண்ணி  வருத்தம்  உற  அப்போது  தலைவி  புலவி
கொள்ளாதிருந்தால்,  தலைவனைக்  காமக்கிழத்தியர் போலத்  தலைவியும்  தாய்போற் கழறித் தழீஇக்
கோடல் உரித்து என்பது இதன் கருத்து.

2 தலைமகன்     முதிர்ந்தவழி     என்பது   தலைவன்  தவறு  நினைந்து   வருத்தம்மிக்க   விடத்து
என்பதையுணர்த்தும்.   வெள்ளை   வாரணனார்    ‘தலைமகள்   முதிர்ந்த   வழி’   எனக்கொண்டு
மனைக்கிழத்தியர் காமக் கிழத்தியரினும் வயதில் முதிர்ந்தவரானவழி என்பர்.

3 புல்லுதல் மயக்கும் (கற்-10) என்னும் சூத்திரத்துக் காமக்கிழத்தியர்க்குக் கூறப்பட்ட ‘காத்த சோர்விற்