உதாரணம் |
“வயல் வெள்ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்விடு நடைப்பகடாரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற் கொள்ளல் மாதோ முள்ளெயிற்றோயே நீயே பெருநலத் தகையே அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநாளெய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப மகனென்னாரே”1 |
(நற்றிணை-290) |
என்பது கொள்க. ‘கவவொடு மயங்கிய காலை’ என்பதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. |
நச். |
இது, தலைவி புலவி கடைக் கொள்ளுங் காலம் உணர்த்துகின்றது. |
இதன் பொருள் :- தாய்போற்கழறித் தழீஇக் கோடல்-பரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக் கொள்ளுமாற்றான் ‘மேனின்று மெய்கூறுங்கேளிராகிய’ (கலி-3) தாயரைப் போலக் கழறி அவன் மனக்கவலையை மாற்றிப் பண்டுபோல மனங்கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப-ஆராய்ந்த மனையற நிகழ்த்துங் கிழத்திக்கும் உரித்தென்று கூறுப. கவவொடு மயங்கிய காலையான-அவன் முயக்கத்தால் மயங்கிய காலத்து என்றவாறு. |
என்றது, தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்றாது தன்மனத்துப் புலவியெல்லாம் மாற்றி இதற்கொண்டும் இனையையாகலெனத் தழீஇக் கொண்டமை கூறிற்று. தலைவன் தன் குணத்தினும் இவள் குணமிகுதி கண்டு மகிழவே தலைவி தன்னைப் புகழ்ந்த குறிப்பு உடையளென்பதூஉங் கொள்க. |
கடப்பாட்டாண்மையிற் தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொறுத்தல்” என்பதைத் தழுவலின் இறந்தது தழீஇயதாயிற்று. 1 பொருள்: பக்கம் 186ல் காண்க. |