132தண்டியலங்காரம்

இ-ள்: முழுமதியினது நிலவின் மேம்பாடும் வேட்கை மிகுந்த சிலையையுடையவனாகிய மதவேள் போரும், பிரிந்தோர் நிறைதளர்வும் ஒருங்கு நிகழ்ந்தன; ஆதலால் தனித்தோர் உயிராகிய பாரத்தைத் தாங்க மாட்டாத தன்மையையும், புன்கண்மையையும் உடைத்து இம்மாலைப் பொழுது எ-று.

இவை யனைத்தும் மாலைப் பொழுதில் நிகழ்ந்தன என்க.

வி-ரை: இப்பாடற்கண் பிரிந்தோர் நிறை தளர்தற்குக் காரணமாகக்கூறப்பட்டன இரண்டு. (1)நிலவு. (2)மன்மதன். இவ்விரு காரணங்களோடு பிரிந்தோர்க்கு நிறை தளர்வும் ஒருங்கு ஏற்பட்டது என்றதால் இது ஒருங்குடன் தோற்றமாயிற்று. நிலவாலும், மன்மதனாலும் நிறை தளர்வு ஏற்பட்டது என்பதால் ஏதுவாயிற்று.

(3) காரணமுந்துறூஉங் காரியநிலை ஏது என்பது காரணத்திற்கு முன்னர்க் காரியம் நிகழ்வது.

எ-டு: 'தம்புரவு பூண்டோர் பிரியத் தனியிருந்த
வம்புலவு கோதையர்க்கு மாரவேள் - அம்பு
2பொருமென்று மெல்லாகம் புண்கூர்ந்த மாலை
3வருமென்(று) இருண்ட மனம்.

இ-ள்: தம்மை காக்கும் தொழிலைப் பூண்ட தலைவர் பிரியத் தனித்து உயிர்கொண்டிருந்த வாசனை பொருந்திய கோதையையுடைய மடவாருக்கு. மாரன்கணை தைக்குமென்று மென்மையையுடைய மார்பகம் புண்ணாகா நின்றது; அதுவேயுமன்றி, மாலைப்பொழுது வருமென்று அவர்களுடைய மனம் இருண்டது எ-று.

வி-ரை: இப்பாடற்கண் காரண முந்துறூஉங் காரியமாகக் கூறப்படுவன இரண்டு (1) ஆகம்புண் கூர்தல். (2)மனம் இருளல். அம்புதைத்தலாகிய காரணம் நிகழ்ந்த பின்னரே ஆகம் புண் கூர்தல் வேண்டும், மாலை வருதலாகிய காரணம் நிகழ்ந்த பின்னரே மனம் ஆகம் புண் கூர்தல் வேண்டும். இங்கு அங்ஙனமின்றி அவ்வக் காரணங்கள் நிகழும் முன்னரே காரியம் நிகழ்ந்தன என்றலின், இவ்விரு நிகழ்ச்சிகளும் காரண முந்துறூஉம் காரியநிலை யாயின.

(3) யுத்தவேது என்பது காரணத்திற்கேற்ற காரியம் நிகழ்வது.

எ-டு: 'பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவால்
முன்னர் அசைந்து முகுளிக்கும் - தன்னேர்.
பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
அரவிந்த நூறா யிரம்.

இ-ள்: சோழன் ஏந்திய வேலின்கண் உண்டாகிய வெண்மை விளக்கம் பரந்த நிலவினால் முன்னே நடுங்கி மொட்டியாநிற்கும், நேர்நின்று பொருதற்கு எதிர்ந்த வேந்தருடைய புனையப்பட்ட கடகத்தையுடைய சிவந்த கையாகிய தாமரைகள் பலவும் உண்டு எ-று.


1.'காரிய முந்துறூஉங் காரணநிலை ஏது' என்பதும் பாடம்.

2.'பொருமுன்னே' என்பதும்.

3.'வருமுன்' என்பதும் பாடங்களாகும்.