ஆழி - தேர்க்கால் . கை - திரள் . இசைத்தல் - பாடுதல் . கூந்தல் - கூந்தலையுடையாள் . மதர்விழி - களித்த விழி .
'அங்கண்மா ஞாலத் தகல்விசும்பை முன்படைத்த
பங்கயத்தோ னந்நாளிப் பைந்தொடிதன் - கொங்கைத்
தடம்பெருக வோங்குமெனத் தானினையா வாறோ
இடம்பெருகச் செய்யா வியல்பு '
எனவும் வரும் .
(இ-ள்) அழகினை யுடைத்தாகிய இடத்தை யுடைத்தாய்ப் பெரியதாகிய உலகத்தின்மீது உண்டாகிய அகன்ற விசும்பை முன்பு படைத்த நான்முகன் அந்நாளில் இவ்வாகாயத்தை இடப்பரப்புண்டாகப் படையாத காரணம் , பசும்பொன்னாற் செய்த தொடியினை யுடையாளுடைய முலைகள் புடைபரக்க வளர்ந்து மீதுயர்ந்தோங்குமென நினையாதவாறோ ? சொல்லுவீர் எ-று .
அம் - அழகு . கண் - இடம் . மா - பெருமை . ஞாலம் - உலகம் . 'ஞாலத்து அகல் விசும்பு படைத்த' என்பதற்கு , ஞாலத்தோடு அகல்விசும்பு படைத்த எனவும் அமையும் . இயல்பு - செய்தி .
இவ்வாறு உலகநடை இறப்பப் புணர்ப்பதே சுவையுடையதென வேண்டுவர் கௌடர் .
வி-ரை: 'ஒரு பேருணர்வு .... கண்' - இதன்கண் 'காதளவும் நீண்டுலவும் கண்' என்ற விடத்து , உலகியற்கைக்குப் பொருந்துமாறு கூறியிருத்தலின் இது காந்தமாயிற்று .
'ஐயோ .... இடம் ' என்ற பாடலில் அல்குல் , கண் ஆகிய ஈருறுப்புக் களையும் உலகியற்கைக்கு மாறாகப் புனைந்திருப்பதும் ; 'அங்கண் ...... இயல்பு' என்ற பாடலில் கொங்கைகளை உலகியற்கைக்கு மாறாகப் புனைந்திருப்பதும் காண்க . இங்ஙனம் உலகியற்கைக்கு மாறாகப் புனைந்துரைப்பதையே கௌடர் விரும்புவர் .
9. வலி
24. வலியெனப் படுவது தொகைமிக வருதல் .
எ-ன் வலி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) வலியென்று சொல்லப்படுவது தொகைச் சொற்றொடர்பு மிகத் தொடுப்பது எ-று .
'மிக' என்றது சிறப்புடையவாக எனக் கொள்க .
எ-டு : 'கானிமிர்த்தாற் கண்பரிவ வல்லியோ ? புல்லாதார்
மானனையார் மங்கலநாண் அல்லவோ ? - தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற் கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு'
இ-ள்:காலம் வரையாது உபகரிக்கின்ற மேகம் போன்ற பெரிய கையினையும் , நீண்டிருக்கின்ற கழலோடு கூடிய காலினையும் , வலிதாகிய வேலினையும் உடையனாகிய சோழனுடைய , துளையை யுடைத்தாகிய பெரிய கையினையும் , நான்ற வாயினையும் உடைய மலையாகிய வாரணம் , தன்னுடைய