பக்கம் எண் :


103


     (இ - ம்.) இதற்குப் "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க.

    
உடும்பு 1 கொரீஇ வரிநுணல் அகழ்ந்து 
    
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி  
    
எல்லுமுய லெறிந்த வேட்டுவன் 2அம்சுவல் 
    
பல்வேறு பண்டைத் தொடைமறந் தில்லத்து 
5
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் 
    
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து 
    
நம்வயிற் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து 
    
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை 
    
நுண்முகை யவிழ்ந்த புறவின் 
10
பொறைதலை மணந்தன்று உயவுமார் இனியே. 

     (சொ - ள்.) அன்பு கலந்து நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊர் - அன்பு மிகுதலாலே உள்ளங் கலந்து நம்பால் விரும்பிய கொள்கையுடனே என்றுந் தன்னெஞ்சிலே எம்மை நினைந்துறையும் காதலியின் ஊர;் உடும்பு கொரீஇ - பகற் பொழுதெல்லாம் சூழ ஆடைபரப்பி நின்று கலைத்தவழி வெளிவந்த உடும்பை ஈட்டியாலே குத்தி; வரிநுணல் அகழ்ந்து - மண்ணின் முழுகி மறைந்து கிடக்கும் வரிகளையுடைய நுணலையை மண் வெட்டியாலே பறித்தெடுத்து; நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி - நெடுகிய கோடுகளையுடைய புற்றுக்களை வெட்டிப் புகை மூட்டியை வைத்துழி வெளிவந்த ஈயலைத் தாழியிலே பெய்து கொண்டு; முயல் எறிந்த வேட்டுவன் - வளைதடியாலே முயலை எறிந்து பற்றிய வேட்டுவன்; எல்லு அம் சுவல் பல்வேறு பண்டத்தொடை மறந்து - இரவிடை அழகிய தோளிலே சுமந்து வந்த பல்வேறு வகையாகிய அப்பண்டங்களைப் பொதிந்த மூடையுடனே ஏனைய கருவிகளையும் மனையகத்தே போகட்டு மறந்து; இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் - ஆங்கு மிகுதியாகப் பருகிய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு கிடவா நிற்கும்; வன்புலக் காட்டுநாட்டது - வன்புலத்ததாகிய காடு சூழ்ந்த நாட்டின்கண் உளதாயிரா நின்றது; முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவில் பொறைதலை மணந்தன்று இனி உயவும் - அங்ஙனம் முல்லையின் நுண்ணிய அரும்பு மலர்ந்த புறவின் கண்ணதாகிய ஊரிலிருந்தாலும் அவள் உள்ளம் பொறுமையுடையதாயிரா நின்றது; இன்று செல்லாவிடில் நனி வருந்தா நிற்கும்; எ - று.

  
 (பாடம்) 1. 
கொலீஇ.
 2. 
அம்சுவல.