பக்கம் எண் :


106


ஆய்வளைக் கூட்டும் அணியும் - அங்ஙனம் பாதுகாத்து வைப்பது தான் எற்றிற்கோ எனக் கேட்டியாயின், எங்களுடைய மிக்க கரிய கூந்தலையுடைய தலைவி இப்பொழுது இற்செறிக்கப்பட்டாள், மற்றொரு பொழுது காப்புச்சிறை நீக்கப் பெறுவளேல் அவள் அவற்றுள் அழகிய கோரையை வளையமாகப் பூண்டுகொள்ளுவாள், நெய்தலந்தழையை உடையாக அணிந்து கொள்ளுவள் காண்; எ - று.

     (வி - ம்.) பல்கூடு - பல குதிர்களுமாம். மிளிர்வை - ஆணத்திலிடப்படுவது, இஃது இக்காலத்தில் "தான்" என வழங்கப்படுகின்றது. சாய் - கோரை. புகர்வு - உணவுக்குரிய பண்டம். நாறு - நாற்று. சாய் வளைக்கும் நெய்தல் உடையணிக்கும் நிரனிறையாகக் கொள்க. நீர்ச்சோற்றை யுண்ணிற் சிறிது மயக்கமுண்டாமாதலிற் கழுமமாந்தியென்றார். தொழின்மேற்செல்வார்க்கு மிக்க வன்மையளித்தலின் இன்றியமையாததாயிற்று. தாஞ்சென்று பறித்தற்கியலாது உழவனை யோம்புமதியென்றதினால் தலைவி இற்செறிக்கப்பட்டதை யுணர்த்தியதாம். வெயிலேறின் உழவெருமை மயங்குமாதலின் இரவிடைத் துயில் பெறாது விரைந்து செல்வதைக் குறித்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இற்செறிப்புரைத்து வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) நின் நடுநரொடு எனக் கண்ணழித்துக் கொள்க. நடுநர் - நாற்றுநடும் மகளிர். ஆய்வளைக் கூட்டும் : பண்புத்தொகை. ஒற்று மிகாது கொள்க. வளையாகக் கையிற்கூட்டும் ஆடையாக மெய்யில் அணியும் என்க. கவர்படுகை - மிகுதியாக அள்ளிக் கொள்ளுதலையுடைய கையுமாம்.

(60)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைவன் வரவுணர்ந்து தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் இரவுக்குறி வருதலையறிந்த தோழி தலைவியை நோக்கி "இரவெல்லாம் காமவேட்கையால் நோய்கொண்டு புலம்பியதறிந்த நம் அன்னை நீ ஏன் தூங்குவாயல்லையோ வென்றாட்கு மெல்ல என்நெஞ்சினுள்ளே கானகநாடனைக் கருதினோர்க்குத் தூக்கமும் வருமோவென்று கூறினே"னெனத் தங்களுடைய துன்பத்தை அவனுணர்ந்து விரைய வரையுமாற்றாற் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் நயம்புரியிடத்தும் என்பதன் கண் அமைத்துக்கொள்க.

    
கேளாய் எல்ல தோழி ! அல்கல் 
    
வேணவா நலிய வெய்ய உயிரா 
    
ஏமான் பிணையின் வருந்தினே னாகத்