பக்கம் எண் :


108


     இனி, இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர், "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்த சான்றல் அருமறை யுயிர்த்தலும்" (தொல்-கள- 20) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர். தலைவி கூற்றெனலே நேரிதாம்.

(61)
  
     திணை : பாலை.

     துறை : இது, முன்னொருகாலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவழுங்குவித்தது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகன் "யான் முன்பு சுரத்தின்கட் சென்றபொழுது, விசும்பிலெழுந்த திங்களை நோக்கி மலைமீது எம் காதலியிடத்து நிரம்பிய திங்களொன்று எம்முடையதென நினைத்திருந்தேனல்லனோ" வென்று முன்பு பொருள்வயிற் பிரிந்ததையும் நிலத்தின் கொடுமையையும், அங்கே சென்ற பொழுது காதலியைக் கருதுங் கவர்ச்சியையுங் கூறிச் செலவழுங்காநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்தானும்" (தொல்-கற்- 5) என்னும் விதிகொள்க.

    
வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை 
    
கந்துபிணி யானை 1 அயர்வுயிர்த் தன்ன 
    
என்றூழ் நீடிய 2 வேய்பிறங் கழுவத்துக்  
    
குன்றூர் மதியம் நோக்கி நின்றுநினைந்து 
5
3 உள்ளினேன் அல்லனோ யானே முள்ளெயிற்றுத்  
    
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல் 
    
எமது முண்டோர் மதிநாள் திங்கள்  
    
உரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழற்ற 
    
உலவை யாகிய மரத்த 
10
கல்பிறங்கு 4 மாமலை உம்பரஃ தெனவே. 

     (சொ - ள்.) வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை- வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புண்ட மூங்கில்களிலே காற்று மோதுதலால் உண்டாகிய ஒலிக்கின்ற ஓசையானது; கந்து பிணி யானை அயர்வுயிர்த்து அன்ன - தறியிலே கட்டப்பட்ட யானை வருந்தி நெட்டுயிர்ப்பெறிந்தாற் போன்றது; என்றூழ் நீடிய வேய் பிறங்கு அழுவத்து - கோடை நிலைபெற்ற மூங்கில் பிறங்கிய சுரத்து நெறியில்; குன்று ஊர் மதியம் நோக்கி நின்று

  
 (பாடம்) 1. 
அயா.
 2. 
வேர் பயில் அழுவத்து.
 3. 
உள்ளினான் அல்லனோ.
 4. 
உயிர் மலை.