நினைந்து-மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி; முள் எயிற்றுத் திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் ஓர் நாள் மதித்திங்கள் எமதும் உண்டு - முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள் நிரம்பிய மதித்திங்கள் என்பது ஒன்று எம்முடையதும் உண்டு; உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப உலவை ஆகிய மரத்த கல்பிறங்கு மாமலை உம்பர் அஃது என - அத்திங்கள் இப்பொழுது யாண்டையதோ வெனில் முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே இலையுதிர்ந்து நிழல் செய்யும் தன்மை நீங்க வெறுங் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலை மீதுள்ளதாயிரா நின்றது என்று; உள்ளினேன் அல்லனோ - யான் நினைத்திருந்தேன் அல்லனோ ? எ - று.
(வி - ம்.) என்றூழ்-கோடை. உரறுதல்-முழங்குதல். உலவை-காய்ந்த கிளையுமாம். உள்ளினேனென்பது முன்பு பொருள்வயிற் பிரிந்தது. என்றூழ் நீடிய அழுவமென்பது நிலத்தின் கொடுமை கூறியது. திருநுதல் முதலாயின காதலியைக் கருதிய கவற்சி. மெய்ப்பாடு - அழுகை. பயன் - செலவழுங்கல்.
(பெரு - ரை.) நிழற்பல உலவை ஆகிய என்றும் பாடம். இது சிறப்புடையதன்று. இனி இச்செய்யுளை, குன்றூர் மதியம் நோக்கி நினைந்து உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல்தப உலவையாகிய மரத்த கல்பிறங்கு (இம்) மாமலை உம்பரது நாள் திங்கள் (போன்று) முள் எயிற்றுத்திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் ஓர்மதி எமதும் உண்டு என்று இயைத்து மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே நிழல்கெட வெறும் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலைமீதுள்ள இந்த முழுத்திங்கள் போன்ற முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங்கமழ்கின்ற அழகிய நெற்றியையுமுடைய ஒரு திங்கள் எம்முடையதும் உண்டு என்று உள்ளினேன் அல்லனோ? என்று பொருள் கூறவேண்டும், இன்றேல் தலைவியின் முகம் மாமலை உம்பரஃது என்னல் பொருந்தாமை ஆராய்ந்துணர்க.
இனி இச்செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் "நிகழ்ந்தது நினைத்தற் கேதுவாகும்" (தொல்-அகத்- 43) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டினர். ஆசிரியர் இளம்பூரண அடிகளார் "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" (-- 44) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டினர்.
திணை : நெய்தல்.
துறை : இஃது, அலரச்சத்தாற் றோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.
(து - ம்.) என்பது, தலைமகன் ஒரு சிறைப்புறமாக வந்திருப்பதறிந்த தோழி அவன்கேட்டு விரைவில் வரையுமாற்றானே ஊரார்