| மரனா ருடுக்கை மலையுறை குறவர் |
5 | அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் |
| வறனுற் றார முருக்கிப் பையென |
| மரம்வறி் தாகச் சோர்ந்துக் காங்கென் |
| அறிவும் உள்ளமு மவர்வயிற் சென்றென |
| வறிதால் இகுளையென் யாக்கை யினியவர் |
10 | வரினும் நோய்மருந் தல்லர் வாராது |
| அவண ராகுக காதலர் இவண்நங் |
| காமம் படரட வருந்திய |
| நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே. |
(சொ - ள்.) தோழி என்னர் ஆயினும் நினைவு இனி ஒழிக-தோழீ ! நம் காதலர் எவ்வளவு சிறப்புடையராயினும் அவர்பால் தூதுவிடக் கருதுவதனை இனி நீ ஒழிப்பாயாக!; அன்ன ஆக இனையல் - நம்மைக் கைவிட்டாரென்று அத்தன்மையாக வருந்தாதே கொள்!; யாம் இன்னம் ஆக நத் துறந்தோர் நட்பு எவன் ? - நாம் இத்தன்மையேமாகி வருந்தும் வண்ணம் நம்மைத் துறந்த அவர் நட்புத்தான் நமக்கு யாது பயன்படும் ?; மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறி இலைச் சாந்தம் - மரற்பட்டையின் நாராலே பின்னிய உடையினையுடைய மலையிலிருக்கிற குறவர் தாம் அறியாமையினாலே மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரத்தில்; வறன் உற்று ஆரமுருக்கிப் பை என மரம் வறிது ஆகச் சோர்ந்து உக்காங்கு - வற்றல் தொடங்கி மிகக் கெடுத்து மெல்லென அந்த மரம் வறிதாமாறு அதன்கண் உள்ள நீர் அறுபட்ட வாயின் வழியே சோர்ந்து வடிந்தாற் போல; அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென இகுளை என் யாக்கை வறிது - என் அறிவும் உளமும் அவரிடத்துச் சென்றொழிந்தன வாதலின் இகுளாய் ! என் உடம்பு உள்ளில் யாதும் இல்லையாய் நின்றது காண்!; இனி அவர் வரினும் நோய் மருந்து அல்ல - இனி அவர் இங்கு வந்தாலும் என் நோய்க்குரிய மருந்தாகார் ஆதலின்; காதலர் அவணர் ஆகுக ! வாராது - காதலர் வாராது அங்கேயே உறைவாராக; இவண் காமம் படர் நம் அட வருந்திய நோய்மலி வருத்தம் எமர் காணன் மார்-இங்குக் காமமும் அதனாலுண்டாகிய நினைவும் நம்மை யொறுத்தலாலே வருந்திய நோய் மிக்க ஏதப்பாட்டினை நம் சுற்றத்தார் காணாதொழிவாராக! எ-று.
(வி - ம்.) நத்துறந்தோர் - நம்மைத் துறந்தோர் : இரண்டன்றொகை. நம் துறந்தோர் என்பது (தொல்-எழுத்- 157) சூத்திரத்தில் அன்ன பிறவுமென்றதனால் வலிந்து நின்றது. காணன்மார்: இது