(து - ம்.) என்பது, பகற்குறிவந்து புணர்ந்து நீங்குந் தலைமகனைத் தோழி நோக்கி "மாலைப்பொழுதாயிற்று, நெறி ஏதமுடைத்து, எமரும் வேட்டை மேற்சென்றனராதலால், எம்மூரின்கண் வந்து இன்றிரவு தங்கிச் செல்வாயாக'வெனப் பிரிவாற்றாமை கூறுவாள் போன்று குறிப்பினால் வரைவு தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் வகை என்பதனால் அமைத்துக் கொள்க.
| சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் |
| மால்வரை மறையத் துறைபுலம் பின்றே |
| இற 1 வருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு |
| 2 வெண்குவட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய |
5 | கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே |
| கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித் |
| துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை |
| எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ |
| எமரும் வேட்டம் புக்கனர் அதனால் |
10 | தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர் |
| முழுவிசைப் புணரி எழுதரும் |
| உடைகடற் படப்பையெம் உறைவின் ஊர்க்கே. |
(சொ - ள்.) சேய்விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் மால்வரை மறையத் துறை புலம்பின்று - சேய்மைக் கண்ணே ஆகாயத்திலேறி வந்த செழுவிய கிரணங்களையுடைய ஆதித்த மண்டிலம் பெரிய அத்தம் என்னும் சிலம்பினூடு சென்று மறைதலானே யாருமின்றி நமது கடற்றுறை தனிமையா யிராநின்றது; இற அருந்தி எழுந்த கருங்கால் வெள் குருகு-இறா மீனைத் தின்றெழுந்த கரிய காலையுடைய வெளிய நாரைகள்; வெண் குவட்டு அருஞ் சிறை தாஅய்க் கரைய கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டன - வெளிய உப்புக் குவட்டின் மேலாக அரிய சிறகை வீசிப் பறந்துசென்று கரையிலுள்ள கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களிலே தங்குதல் கொண்டன; கணைக் கால் மா மலர் கரப்ப
(பாடம்) 1. | அருந்தெழுந்த. 2. | வெண்கோட்டு. | |