பக்கம் எண் :


119


     (து - ம்.) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைமகனுக்கு இற்செறிப்புணர்த்தி அவன் வரையுமாற்றானே, "அவர்மலையில் மழை பெய்து வெள்ளம் வாரா நின்றது, நம்மை இல்வயிற்செறித்திருப்பதை விட்டு விடும்படியாக யாரேனுஞ் சென்று கூறினால் அன்னை விடுவாளோ? விடுவளாயின் நமது நோய் நீங்கும்படி ஆடுகிற்பேம்; அங்ஙனங் கூறுவாரைப் பெறாமையின் அது கழிந்த" தெனத் தோழி தலைவியை நோக்கி வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் மேலைச் செய்யுட் கோதிய இலக்கணமே அமையும்.

    
விளையா டாயமொடு ஓரை யாடாது 
    
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல் 
    
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக் 
    
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் 
5
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம் 
    
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே 
    
செல்கென விடுநள்மன் கொல்லோ எல்லுமிழ்ந்து 
    
உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள் 
    
கொடி நுடங் கிலங்கின மின்னி 
10
ஆடுமழை இறுத்தன்றவர் கோடுயர் குன்றே. 

     (சொ - ள்.) அவர் கோடு உயர் குன்று எல் உமிழ்ந்து உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் - அவரது சிகரம் உயர்ந்த குன்றம் ஒளியை எங்கும் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இரவிருளில் நடுயாமத்திலே; கொடி நுடங்கு இலங்கினமின்னி ஆடு மழை இறுத்தன்று - கொடி நுடங்கினாற் போன்றிலங்கினவாய் மின்னி இயங்குகின்ற முகில் தங்கி மழையைப் பெய்யாநின்றது; இளையோர் விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இல்லிடத்தில் செறிந்திருத்தல் அறனும் அன்று ஆக்கமும் தேய்ம் என - இப்பொழுது இளமங்கையர் தாம் விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு ஓரையாடாமல் வீட்டில் இற்செறிக்கப்பட்டிருத்தலான அற நெறியன்று அன்றிச் செல்வமுந் தேய்ந்துவிடும்' என்று; வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறின் செல்கென விடுநள் கொல் - விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரை நாம் பெறுவேமாயின், அவ்வன்னை நம்மை நோக்கி நீயிர் செல்வீ்ராக என்று விடுப்பாளோ ?; குறு நுரை சுமந்து நறுமலர் உந்திப் பொங்கி வரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம் - அங்ஙனம் விடுப்பின் அவர் மலையிற் பெய்யுமழை குறிய நுரைகளைச் சுமந்து கொண்டு நறிய மலர்களுடனே யாற்றிற் பொங்கி வருகின்ற புதுநீரை