பக்கம் எண் :


132


ஆராய்ந்த இழையை அணிந்த தலைவியின் குளிர்ச்சியுற்ற கண்களினுடைய; உறாஅ நோக்கம் உற்ற என் பைதல் நெஞ்சம் - பொருந்தாப் பார்வையுற்ற எனது வருந்திய நெஞ்சம்; உய்யும் ஆறு நகாஅது உரைமதி-உய்யும் வண்ணம் இங்ஙனம் நகை செய்யாது உரைப்பாயாக !; என் உள்ளம் உடையும் - நகைத்துக் கூறின் என் உள்ளம் கலங்காநிற்கும்; எ - று.

    (வி - ம்.) கோட்டுமா - பன்றி. பயனிதுவென்னாது நகையாடிக் கூறுமிது பாம்பு அணங்கியதுபோலுமெனவுமாம். வாழி - இகழ்ச்சிக் குறிப்புமாம். உறாநோக்கம் - செவ்வனேபாராது கடைக்கண்ணானோக்கிய நோக்கம். பைதல் - வருந்துதல்.

    தான்படுந்துன்பத்தை யாற்றுவித்தலை விடுத்து அசதியாடலின் நயனுடையயையல்லையென்றான். இரக்கங்கூருதற்பொருட்டு வாழியோவென்றான்: என் வருத்தமறியுந் திறத்தினை யல்லைபோலுமென்பான் குறுமகளென்றான்: இளமையோர் பிறவுயிர்படுந் துன்பத்தைக் கருது மறிவு வாய்ந்திலராதலின் : உறாஅநோக்கந் தன்னுயிரை வாட்டலின் கோட்டுமா தொலைச்சி ஊன்பெய்த பகழியை உவமித்தான். மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.

    (பெரு - ரை.)கோட்டுமா தொலைச்சி என்பதைத் தொலைச்ச எனச் செயவெனெச்சமாக்கிப் பொருள் கூறுதல் நன்று.

(75)
  
    திணை : பாலை.

    துறை : இது, புணர்ந்துடன் போகாநின்ற தலைவன் இடைச்சுரத்துத் தலைவிக் குரைத்தது.

    (து - ம்.) என்பது, உடன்கொண்டு செல்லுந் தலைவன் தலைவியைத் தன் ஆயத்தொடு செல்வாள்போல ஆற்றுவித்துக் கொண்டு செல்கின்றான் நின் அடிகள் நோவாதிருத்தற் பொருட்டு ஆலமரத்தின் கீழே தங்கி இளைப்பாறி, மேலும் செல்லும்போது எங்கெங்கே தங்க விரும்பினும் அஞ்சாது அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வருந்தாதே கெனக் கூறி மெல்லக்கொண் டேகாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" என்னும் நூற்பாவின் கண் 'இடைச்சுரமருங்கின். . . . . . .அப்பாற்பட்ட ஒருதிறத்தானும் (தொல்-அகத்- (41) ) என்புழி அப்பாற்பட்ட ஒருதிறம் என்பதன்கண் அமைத்துக் கொள்க.
    
வருமழை கரந்த வால்நிற விசும்பின்
    
நுண் துளி மாறிய உலவை அம்காட்டு
    
ஆல நீழல் அசைவு நிக்கி
    
அஞ்சுவழி அஞ்சாது அசைவுழி அசைஇ
5
வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள்
    
இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை