பக்கம் எண் :


139


    (து - ம்,)என்பது, குறைநயப்பித்தபின் தனது அருமையும் தலைவியின் பெருமையுமறிந்து நீட்டியாது வரைதல் காரணமாகத் தலைமகனுக்கு இயையாமல் தோழி மறுத்துக் கூறக் கண்ட அவன் ஆற்றானாகி அத்தோழி கேட்டு விரைந்து கூட்டுவிக்குமாறு தன்னெஞ்சை நோக்கி அத்தன்மையளாகிய இளமகளல்லது யானுற்றநோய்க்குப் பிறிதொரு மருந்தில்லைகாணெனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள-20) என்னும் நூற்பாவினுள் "தோழி நீக்கலின் ஆகிய நிலைமையும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் 
    
இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு 
    
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும் 
    
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து 
5
தழையுந் தாருந் தந்தனன் இவனென 
    
இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத் 
    
தைஇத் திங்கள் தண்கயம் படியும் 
    
பெருந்தோள் குறுமகள் அல்லது 
    
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே. 

    (சொ - ள்.) மன்ற மலர் தலைக் கார்ஆன் எருமை இன் தீம்பால் பயம் கொண்மார் கன்று விட்டு - தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும்புலர் விடியலின் - ஊரிலுள்ள மாடு மேய்க்கும் இளஞ் சிறுவர்கள் அவ் வெருமைகளின் மீதேறிக்கொண்டு தனியே மேய்த்து வருதற் கேகாநிற்கும் பெரிய இருள் நீங்கும் விடியற் காலத்து, விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் இவன் தந்தனன் என - விருப்பத்தோடு வந்து உடுக்குந் தழையும் சூடுமாலையும் இவன் தந்தான் என்று; இழையணி ஆயமொடு தகு நாண் தடைஇ - கலன் அணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு; தைத்திங்கள் தண் கயம் படியும் பெருந்தோள் குறுமகள் உற்ற நோய்க்கு மருந்து - என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்; அல்லது பிறிது இல்லை - அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண் !; எ - று.

    (வி - ம்.) மன்றம் - தொழுவம். தடவு - வளைவு; தடைஇ - வளைந்து. எருமைக்காரான் : இருபெயரொட்டு. விடியலிற் கயம்படியுமெனக் கூட்டுக.