(து - ம்,)என்பது, தலைவன் பிரிதலானே ஆற்றாது கனவுகண்டெழுந்த தலைவி தோழியை நோக்கி வௌவால் தான் துயிலும் பொழுது அங்குக் கிட்டப்பெறாத நெல்லியம் புளிச்சுவைக்குக் கனவு கண்டாற்போல அவர் நாட்டுப்பரதவர் மகிழ்ச்சியுங் கானலும் நினைந்த அப்பொழுதிலேயே யானுங் கனவுகாண அஃதொழிதலாகிற்றென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்" என்னும் (தொல்-கள- 20) விதிகொள்க.
| உள்ளூர் மாஅத்த முள்ளெயிற்று வாவல் |
| ஓங்கல் அஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின் |
| வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காட்டு |
| நெல்லியம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு |
5 | அதுகழிந் தன்றே தோழி அவர்நாட்டுப் |
| பனியரும்பு உடைந்த 1 பெருந்தாள் புன்னை |
| துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்குஞ் |
| சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் |
| பெருந்தண் கானலும் நினைந்தவப் பகலே. |
(சொ - ள்.) தோழி அவர் நாட்டு பெருந்தாள் புன்னை பனிஅரும்பு உடைந்த துறை மேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும் - தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து அவற்றின் பராகம்
(பாடம்) 1. | நெடுந்தாள் புன்னை. |