(து - ம்,)என்பது, பொருள்வயிற் சென்ற தலைவன் மீண்டுவந்ததைக் கேள்வியுற்ற தோழி தலைவியை நோக்கி, முன்பு நாள்தோறும் மாலைப்பொழுதில் வருத்தத்தைக் கொடுத்து நம்மைத் துன்புறுத்தும் வாடையானது அவர் வந்தபிறகும் யானையுயிர்த்தாற்போல வருமோ? அங்ஙனம் வரினும் யாதொரு தீங்குஞ் செய்யாதென உவந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" என்னும் நூற்பாவின்கண் வரும் மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் என்புழி வந்த பிற என்பதனால் அமைத்துக்கொள்க.
| கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர் |
| திரைப்பிதிர் கடுப்ப முகடுகந் தேறி |