| நீயுணர்ந் தனையே? தோழி வீயுகப் |
| புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப் |
| பாடிமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையோடு |
| உடங்கிரை தேருந் தடந்தாள் நாரை |
5 | ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் |
| மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பைத் |
| தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும் |
| கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப் |
| பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப் |
10 | புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்க் |
| கடுமாப் பூண்ட நெடுந்தேர் |
| நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே. |