பக்கம் எண் :


158


முதற்குறிப்பெச்சம். தமர் மறாது மகட்கொடை நேர்வரென்றதை யடக்கிப் 'பெருநல்லீகை நம் சிறுகுடி'யெனக் குறிப்பித்தாள்.

    உள்ளுறை :-பெடை பாகன் முதலாயினோராகவும், நாரை தலைவனாகவும், கடலிற்சென்று இரைதேடுதல் வேற்றுநாட்டுச் சென்று பொருளீட்டியதாகவும், சொரிதல் அவர்க்கு இருநிதி யளிப்பதாகவுங் கொள்க. மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியை மகிழ்வித்தல்.

    (பெரு - ரை.) பெடையொடு உடங்கு பனிக்கடல் துழைஇ இரைதேரும் நாரை எனக் கொண்டு கூட்டுதல்நேரிதாம். செங்கடைச் சிறுமீன் என்புழி வால் சிவந்துள்ள சிறியமீன் எனினுமாம். பகல் இவண் வரவு நீ உணர்ந்தனையே என இயைத்துக்கொள்க.

(91)
  
    திணை : பாலை.

    துறை : இது, பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

    (து - ம்,) என்பது தலைவன் பிரிதலால் வருந்திவேறுபட்ட தலைவியைத் தோழிநோக்கி, ஆனிரையுண்ணவிட்ட நீர்ப்பத்தரைத் திறந்து களிறு தன் கன்றும் பிடியுமுண்ணக் கொடாநிற்குஞ் சுரத்தின்கண்ணே சென்ற தலைவர், நம்மைக் கருதினாரில்லைபோலும், ஆதலின் அவர் திறத்து வருந்தியாவதென்னையென அவள் ஆற்றும் வண்ணம் தெளியக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி'(தொல்-கற்- 6.) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
உள்ளார் கொல்லோ தோழி துணையொடு 
    
வேனில் ஓதிப் பாடுநடை வழலை 
    
வரிமரல் நுகும்பின் வாடி அவண 
    
வறன்பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன் 
5
வேட்டச் சீறூர் அகன்கண் கேணிப் 
    
பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர் 
    
புன்தலை மடப்பிடி கன்றோடு ஆர 
    
வில்கடிந்து ஊட்டின பெயரும் 
    
கொல்களிற்று ஒருத்தல் சுரன்இறந் தோரே. 

    (சொ - ள்.) தோழி வேனில் பாடு நடை ஓதி வழலை துணையொடு வரி மரல் நுகும்பின் வாடி அவண - தோழீ ! முதுவேனிற்காலத்து வருந்திய நடையையுடைய ஓந்தியாகிய வழலை தன் துணையோடு வரிகளையுடைய மரலின் இளமடல் போல வாட்டமுற்று அவ்விடத்திற் கிடத்தலையுடைய; வறன் பொருந்து குன்றத்து