பக்கம் எண் :


16


அகரம் தொகுக்கும்வழித் தொக்க விகாரம். பெயவென்னுஞ் செயவெனெச்சம் காரியப்பொருட்டு. இக்காலத்தை யென்பது முதற் குறிப்பெச்சம்.

     மழை பெய்து பெருக்கெடுப்பிற் காட்டில் வருதற்கியலாதாதலிற் கார் காலத்தைக் காண்டலும் வருவரென்னுங் குறிப்பால் பெருக்கெடுக்குமாறு மழைபெய்தற் பொருட்டு மின்னா நிற்குமென்றாள்.

     இறைச்சிகள் :- (1) வாடுகின்ற பெருங்காட்டிலே அக்காடு தழைப்ப மழைபெய்யத் தொடங்குமென்றது, வருந்திய நின்மாட்டு அருள்செய்ய வேண்டி இன்னே வருவரென்றதாம்.

     இறைச்சிகள் :- (2) நெல்லருந்திய யானை கவலைகெடத் துயிலு மென்றது காதலனொடு இன்ப நுகர்ந்த நீ கவற்சியின்றிச் சேக்கையிலே துயிலப் பெறுவாயென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) நீத்தம் காட்டினை அலைத்து ஆரவாரிப்பவும் எனினுமாம்.

(7)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இஃது இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடு்ங் கண்ட தலைமகன் சொல்லியது.

     (து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சி இறுதியில் ஆயத்தொடு கூடிய தலைமகளை அவ் வாயத்தார் செய்யும் வழிபாடறிந்த தலைமகன், இவள் யார் மகளென வியந்து இவள் எனக்கு எய்தற்கரியளாமென ஆற்றானாகி, இத்தகைய புதல்வியைப் பெற்று எனக்குதவிய இவள் தந்தையும் தாயும் வாழ்க வென வாழ்த்தா நிற்பது.

     (இ - ம்.) இதனை, "மெய் தொட்டுப் பயிறல்", (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுவழி என்பதன்கண் "சொல்லிய" என்ற மிகையான் தலைவி நீங்கியழிப் பிறந்த வருத்தத்தைத் தலைவன் கூறியதென அமைத்துக்கொள்க.

    
அல்குபட ருழந்த அரிமதர் மழைக்கண் 
    
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல் 
    
திருமணி புரையு மேனி மடவோள் 
    
யார்மகள் கொல்லிவள் தந்தை வாழியர் 
5
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல்  
    
அரிவனர் அரிந்துந் தருவனர் பெற்றுந்  
    
தண்சேறு தாஅய் மதனுடை நோன்தாள் 
    
கண்போல் நெய்தல் போர்விற் பூக்குந் 
    
திண்டேர்ப் பொறையன் தொண்டி 
10
தன்திறம் பெறுகஇவள் ஈன்ற தாயே.