பக்கம் எண் :


172


    (து - ம்,) என்பது, பரத்தையானவள் தன்னைத் தலைவன் பிரிந்து செவ்வணி கண்டு மனைவயிற்புக்கானென்பதையறிந்து, தன்பால் அவன் செய்ததனைத் தலைவி கேட்டு வெறுப்படையவேண்டி, அத் தலைவிக்குப் பாங்காயுள்ள தோழி முதலானோர் கேட்குமாறு தன் தோழியாகிய விறலியை நோக்கி ஊரன் என்னைப் பற்றி வளையைப் பறித்தலாலே நான் உன் மனைவிக்கு இதனைச் சொல்லுவேன் என்றலும் அவன் நடுங்கிய நிலைமையை நினைக்குந்தோறும் நகுகிற்பேனென இகழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல்-கற்- 10) என்னும் நூற்பாவின்கண் இவற்றோடு பிறவும்' என்பதனால் அமைத்துக்கொள்க.

    
உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்ளுகிர் 
    
மாரிக் கொக்கின் கூரலகு அன்ன 
    
குண்டுநீ ராம்பல் தண்துறை யூரன் 
    
தேங்கம ழைம்பால் பற்றி யென்வயின் 
5
வான்கோல் எல்வளை வௌவிய பூசல் 
    
சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் 
    
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனையூர்ப் 
    
பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் 
    
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் 
10
புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் 
    
மண்ணார் கண்ணின் அதிரும் 
    
நன்னர் ஆளன் நடுங்கஞர் நிலையே. 

    (சொ - ள்.) தோழி வள் உகிர் மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன குண்டு நீர் ஆம்பல் - தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்துறை ஊரன் தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் வான் கோல் எல்வளை வௌவிய பூசல் - தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; சினவிய முகத்து சினவாது சென்று நின் மனையோட்கு உரைப்பல் என்றலின், சினமுற்ற முகத்தோடு அவனை நோக்கி 'இனி, யான் இங்ஙனம் சினவாது சென்று நின் மனைக் கிழத்திபால் இங்கு நிகழ்ந்ததனைக் கூறாநிற்பேன்' என்றவுடன்: முனை ஊர்ப் பல் நெடுஆ நிரை வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் முந்தை - ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய