பக்கம் எண் :


189


முன்பு உணவுண்ணமறுத்த சிறுவிளையாட்டினையுடையாள் அறிவும் ஒழுக்கமும் எப்படி யறிந்தனள்? தந்தை சோற்றைக்கருதாது மறுத்துண்ணும் வன்மையளாயினளே யென வியந்து கூறாநிற்பது. இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று.

    (வி - ம்.) இதுவுமது.

    
பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் 
    
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் 
    
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் 
    
உண்ணென்று ஒக்குபு 1புடைப்பத் தெண்ணீர் 
5
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று 
    
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் 
    
பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி 
    
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி 
    
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் 
10
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் 
    
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் 
    
ஒழுகுநீர் நுணங்கறல் போலப் 
    
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே. 

    (சொ - ள்.) பிரசம் கலந்த சுவை வெண் தீம் பால் விரி கதிர்ப் பொன் கலத்து ஒருகை ஏந்தி - தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பாலுணவை விரிந்த ஒளியையுடைய பொன்னாலாகிய கலத்திலிட்டு அதனை ஒரு கையிலேந்தி நின்று; புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் ஓக்குபு உண் என்று புடைப்ப - புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை ஓச்சி நீ உண்ணுவாய் என்று எறிதலும்; தெள் நீர் முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்பத் தத்துற்று - தெளிந்த ஒளியையுடைய முத்துக்களை உள்ளே பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து; அரி நரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரி மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி - மெல்லியவாய நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமையடைந்த செவிலியர் பின்தொடர்ந்து பற்ற முடியாமல் மெலிந்தொழியுமாறு தான் முன்றிலின்கணுள்ள பந்தரின் கீழோடி 'நீ உண்ணுவாய்' என்றதன் விடையாக; ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி-யான் உண்ணேன் காண்!" என்று மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டினையுடைய என் மகள்; அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் -

  
 (பாடம்) 1. 
பிழைப்ப.