(து - ம்,) என்பது, தலைவன் பிரிதலாலே தலைமகள் வருந்துவதறிந்த தோழி அவன் வருதற்கறிகுறியாகிய நன்னிமித்தந் தோன்ற அது கொண்டு தலைவியை நோக்கி 'நமது பாக்கம் கல்லென்றொலிக்கும்படி கொண்கனது தேர் வருமாதலின் நீ வருந்தாதேகொள்'ளென அவள் தெளிந்து ஆற்றியிருக்குமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 1 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| அத்த இருப்பைப் பூவின் அன்ன |
| துய்த்தலை இறவொடு தொகைமீன் பெறீஇயர் |
| வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர் |
| மரன்மேற் கொண்டு மான்கணந் தகைமார் |
5 | வெந்திறல் இளையவர் வேட்டெழுந் தாங்குத் |
| திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி |
| வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி |
| நிணம்பெய் தோணியர் இகுமணல் இழிதரும் |
| பெருங்கழிப் பாக்கங் கல்லென |
10 | வருமே தோழி கொண்கன் தேரே. |
(சொ - ள்.) தோழி அத்தம் இருப்பைப் பூவின் அன்ன துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் - தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; வரி வலைப் பரதவர் கருவினைச்சிறார் - பின்னி