(து - ம்,) என்பது, வினைவயிற் பிரியுந் தலைவன் குறித்துச்சென்ற பருவம் வருதலும் அவன் வாராமையறிந்து ஆற்றாத் தலைவியை ஆற்றுவிக்குந் தோழி "அவன் வருதலையறிந்து கடலினீரை ஆவிவடிவாக வாங்கிப் பருகி மின்னியிடித்துப் பெய்யத் தொடங்கிய மழைக்கு யான் யாது கைம்மாறு செய்ய வல்லே" னென வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனையும் மேற்செய்யுட்கோதிய "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக்கொள்க.