(து - ம்,) என்பது, தலைமகன் மணஞ்செய்துகொள்ள நீட்டித்தலாலே தலைமகள் வருந்துவதை அறிந்த தோழி அவர் விரைவில் வருவராதலின், அதுகாறும் நீ வருந்தாதே யென்றலும் அவள், பொறாளாகி 'இவ்வண்ணமாய் வருகின்ற மாலைப்பொழுதையும் கருதாதுநீங்கினராதலின், அதனால் யான் அடைந்தநோய் முருகணங்கியதால் வந்ததென ஊரார் கூறுவர;் அவ்வலர்மொழியை எய்தியும் வாழ்தல் பண்பன்றாதலின் யான் உயிர் வாழலே'னென் றழிந்து கூறாநிற்பது.