(து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீண்டு வரும்பொழுது காதலியை நினைந்து கவன்ற தலைமகனைத் தேர்ப்பாகன் நோக்கி 'மனைவியினுடைய தோளிலே துயிலுவதை விரும்பினோய், வருந்தாதே கொள்; நின் கண்ணி வாழ்க; நீ விரும்பிய காதலியினூர் இப்புறவத்து ளிருக்கின்றதாதலின், விரையச் சென்று காணுமாறு இன்னே தேரைச் செலுத்துகிற்பேன் கா'ணெனத் தெருட்டிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆற்றது பண்பும் கருமத்து வினையும் . . . . . தோற்றஞ்சான்ற அன்னவை பிறவும் இளையோர்க்குரிய கிளவி என்ப" (தொல். கற். 30) என்னும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க. என்னை ? தேர்ப்பாகனும் தலைவன் ஏவலிளையரில் ஒருவனே ஆகலின் என்க. இனி, பாகன் கூற்றிற்கு உரியவனாக ஆசிரியர் தொல்காப்பியனார்