பக்கம் எண் :


209


விதந்தெடுத்துக் கூறாராயினும், பேராசிரியர் செய்யுளியலுள் "பாணன் கூத்தன் விறலி பரத்தை . . . . தொன்னெறி மரபிற் கற்பிற்குரியர்" (செய்யுளியல். 190) எனவரும் நூற்பா வுரையின்கண் "தொன்னெறி மரபின் என்றதனாற் பாகனும் தூதனும் கூறவும் அமையும்" எனத் தழுவிக்கோடலும் காண்க. அவ்விடத்தே பாகன் கூற்றிற்கு இச்செய்யுளையே எடுத்துக்காட்டினர், அதனை ஆண்டுக் காண்க.

    
விதையர் கொன்ற முதையற் பூழி  
    
இடுமுறை நிரப்பிய ஈரிலை வரகின்  
    
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை  
    
அரலை அங்காட்டு இரலையொடு வதியும்  
5
புறவிற்று அம்மநீ நயந்தோள் ஊரே  
    
எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு  
    
பரியல் வாழ்கநின் கண்ணி காண்வர  
    
விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா  
    
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்  
10
கான்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய  
    
1 வெவ்விருந் தயரும் மனைவி  
    
மெல்லிறைப் பணைத்தோள் 2 துயிலமர் போயே.  

     (சொ - ள்.) காண் வர விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க; எழீஇத் தண் பெயல் கான் யாற்று இடு மணல் கரை பிறக்கு ஒழிய - எழுந்து தண்ணிய மழை பெய்தலாலே பெருகிய கான் யாற்றினருகில் இடப்பட்ட மணலானாகிய கரைபின்னே செல்லும்படி போந்து; வெவ் விருந்து அயரும் மனைவி மெல் இறை பணை தோள் துயில் அமர்போய்! - நின் புதிய வரவை விரும்பி ஏற்று மகிழும் மனைவியினுடைய மென்மையாயுயர்ந்து பருத்த தோளின் கண்ணவாகிய துயிலை விரும்புகின்ற இறைவனே !; வேந்து எல்லி விட்டன்று எனச் சொல்லுபு பரியல் - நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே கொள் !; நின் கண்ணி வாழ்க - நின் மாலை வாடாது நீடு வாழ்வதாக; நீ நயந்தோள் ஊர் - நீ விரும்பிச் செல்லும் காதலியின் ஊர்; விதையர் கொன்ற முதையல் பூழி இடுமுறை நிரப்பிய ஈர் இலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை - விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையே விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை

 (பாடம்) 1. 
கொடித்தேர்க்,
  2. 
துயிலமர்வோயே.