பக்கம் எண் :


211


     (து - ம்.) என்பது, சிறைப்புறத்து வந்திருந்த தலைமகன் கேட்டு விரைய வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கித் தினைகொய்யலாயின; முல்லையரும்பின; நாடன் வருவானென்பது உண்டோ இல்லையோவென ஆராய்ந்து அன்னையும் அமரா முகத்தளாயினள்; ஆதலின் இனி நமது களவொழுக்கம் பொருந்தி நிகழுமோ வென்பதனை நீயே ஆராய்ந்தறிகவெனக் கவன்று கூறாநிற்பது.

     (இ - ம்.) ) இதனை,"களனும் பொழுதும் . . . . . அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத  
    
கருங்காற் செந்தினை கடியும் உண்டன  
    
கல்லக வரைப்பில் கான்கெழு சிறுகுடி  
    
மல்லன் மருங்கின் மௌவலும் அரும்பின  
5
நகையுரும் உரறும் நாம நள்ளிருள்  
    
வரையக நாடன் வரூஉம் என்பது  
    
உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்றென  
    
நின்று மதிவல் உள்ளமொடு மறைந்தவை ஆடி  
    
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு  
10
நீயே சூழ்தல் வேண்டும்  
    
பூஏய் கண்ணியது பொருந்து மாறே.  

     (சொ - ள்.) பூ ஏய் கண்ணி - நீலமலர் போலுங் கண்ணையுடையாய்! இருங் கல் அடுக்கத்து என்னையார் உழுத கருங் கால் செந்தினை கடியும் உண்டன - பெரிய மலையின் பக்கத்தில் என்னையன்மார் உழுது விதைத்த கரிய அடித் தண்டினையுடைய செவ்விய தினைக்கதிரெல்லாங் கொய்யப்பட்டன; கல் அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி மல்லல் மருங்கின் மௌவலும் அரும்பின - மலைசூழ்ந்த இடத்திலிருக்கின்ற கானகத்தே பொருந்திய சிறுகுடியின் வளப்பத்தையுடைய பக்கங்களிலுள்ள மல்லிகையும் அரும்புண்டாயின; நகை உரும் உரறும் நாம் நள் இருள் வரையக நாடன் வரூஉம் என்பது உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் என நின்று மதி வல் உள்ளமொடு - இன்னதொரு மின்னொளியுடன் கூடிய இடி முழங்குகின்ற அச்சத்தையுடைய இரவு நடு யாமத்து இருளில் மலைசூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது உண்மையோ ? இல்லையோ ? வேறுயாதோ ? என நின்று ஆராயவல்ல உள்ளத்துடனே; மறைந்து அவை ஆடி அன்னையும் அமரா முகத்தினள் - அயலார்க்குத் தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு அன்னையும் விரும்பாத கொடுமை தோன்றிய முகத்தினளா யிராநின்றாள்; அதுபொருந்தும் ஆறு