பக்கம் எண் :


212


நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும் - ஆதலால் அவனோடுண்டாகிய களவொழுக்கம் இனி நிகழுமா ? என்பதனை நின் உள்ளத்தாலே நீயே ஆராய்ந்தறியவேண்டுங்காண்!; எ - று.

     (வி - ம்.) கடியுணல் கூறவே இனிப் பகற்குறி நிகழாதென்றதாம். மௌவ லரும்புதல் கார்காலத்தாதலின் அதுவுந் தினைகொய்தற்கு அடையாயிற்று. அஃது அரும்பியது கூறவே அரும்பு மலருங்காலம் வரைதற்குரியதென்று குறிப்பித்ததாம். உருமுரறு நள்ளிருளென்றது தலைவன் வருநெறியினேதத்துக்கஞ்சி இரவுக்குறியு மறுத்ததாம். அமரா முகத்த ளன்னை யென்றது, களவொழுக்கம் புலப்பட்டு அலரெழுந்தமையும் தலைவியை யில்வயிற் செறித்தமையுங் குறிப்பித்ததாம். இவ்வனைத்துங்கூறி இருவகைகுறியு மறுத்ததால் வரைவுடன்படுத்தியதாயிற்று. அமராமுகத்த ளென்றது, முட்டுவயிற்கழறல். உருமுரறு மென்றது, ஏதம் ஆய்தல். கடியுண்டன முதலியவை, அவன் புணர்வுமறுத்தல். ஏனை மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.

     (பெரு - ரை.) மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின என்றும் பாடம். இதற்கு மெல்லிய பள்ளங்களின் அயலிலே மல்லிகை அரும்பின என்க. மௌவல் - முல்லையுமாம். இனி நரையுரும் உரறும் என்றும் பாடம். நரை - பெருமை. "மரந்தின்னூஉ வரையுதிர்க்கும் நரையுருமின் ஏறனையை" என மதுரைக் காஞ்சியிலும் வருதலுணர்க; (மதுரைக்-63) மறந்தவை ஆடி என்புழி, ஆடி என்றது ஒற்றாடி; அஃதாவது ஒற்றியறிய முயன்று என்றபடியாம். நள் இருள் வரையக நாடன் வரூஉம் என்பது என்றது, அங்ஙனம் எழும் அலரும் உண்டென்று நுண்ணிதின் உணர்த்தியபடியாம். நீயே சூழ்தல் வேண்டும் எனவே என் சூழ்ச்சியின்கண் அது இனி நிகழவியலாதென்பது துணியப்பட்டது என்றவாறும் ஆயிற்று. அது என்றது களவொழுக்கத்தை.

(122)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்திலே காணும்பொழுதினுங் காணாப்பொழுது பெரிதாகலாற் பிரிந்துறையுந் தலைவி ஆற்றாளாகித் துன்புறுவதையும் தலைவன் சிறைப்புறத்து வந்திருப்பதனையும் அறிந்த தோழி அவன் விரைய வரைந்து கொள்ளுமாற்றானே கூறுவாளாய்த் தலைவியை நோக்கி நீ அணிந்து, ஓடிப் பார்க்கும் விளையாடலு மில்லையாம்படி நினக்குற்ற நோயை எனக்குரையாயென ஆராய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய விதியே அமையும்.

    
உரையாய் வாழி தோழி இருங்கழி  
    
இரையார் குருகின் நிரைப்பறைத் தொழுதி