பக்கம் எண் :


214


    சிற்றில்புனைந்து பரிசிறந்தோடி யென்றது தலைவி சிற்றில் புனைந்த அறியாப் பருவத்தே தலைவன் விருந்தாய் வந்தேனென ஆங்கே பூழிப் போனகமளித்த காலந்தொட்டு அவனை மணமகனாகக் கருதியிருந்தமை யறிவுறுத்தியதாம். கானலிலே தழையுடுத்ததைக் கூறியது தலைமகன் கொடுத்த தழையுடுத்துப் பகற்குறியிற் களவொழுக்கத்துப் பயின்றமை அறிவுறுத்தியதாம். இரணையலவற் பார்க்குமென்றது களவொழுக்கத்தை விட்டுக் கற்பிற்பட்டுத் தலைவனுந் தலைவியுங் கூடியின்புறுமாட்சியைப் பெறவில்லையே யென்றதாம். பெருந்துயரமாகிய நோயென்றது தலைவியின் துன்பமிகுதி யறிவுறுத்தியதாம். இவற்றைக் கேட்டிருந்த தலைமகன் நம் பிரிவால் தலைவி துன்பெய்தினள் போலாமெனப் பிற்றைஞான்றே வரைவொடு புகுவானாவது. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-வரைவுடன்படுத்தல்.

     (பெரு - ரை.) செம்பு ஏர் - செம்பு போன்ற நிறத்தையுடைய எனினுமாம்.

(123)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவற் குரைத்தது.

     (து - ம்.) என்பது, தலைவனாலே பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனை நோக்கி ஐயனே! தலைவி தனியே யிருப்பதை யான் ஆற்றகிலேன் ஆயினும், தானே வந்தெய்தியதே யென்று வருந்துவளாதலின் இனி, நீ பிரியா துறைவாயாகவென அழிந்துகூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
    
ஒன்றில் காலை அன்றில் போலப்  
    
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை 
    
யானும்ஆற் றேனது தானும்வந் தன்று 
    
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை 
5
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர் 
    
நௌவி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி  
    
உருக்குறு கொள்கலங் கடுப்ப விருப்புறத் 
    
தெண்ணீர்க் குமிழி இழிதருந் 
    
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. 

     (சொ - ள்.) ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை - ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றேன் - யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; ஈங்கை முகை