(து - ம்.) என்பது, "ஒன்றாத் தமரினும்" என்ற
(தொல். பொரு. 41) சூத்திரத்துக் கூறப்பட்ட 'உடைமைய துயர்ச்சி' கருதிப் பொருள் சேர்த்தற்பொருட்டுப் பிரிய வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கி மற்றும் அதன்கண்ணே கூறப்பட்ட பொருள் செயல்வகைப் பாலவாகிய 'நாளதுசின்மையும், அன்பினதகலமும்' இன்பத்தின்பாலவாகிய 'இளமைய தருமையும் அகற்சிய தருமையும், பிறவுங்' கூறி வருந்திச் செலவழுங்கா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| பைங்காய் நல்லிடம் ஒரீஇய செங்காய்க் |
| கருங்களி ஈந்தின் வெண்புறக் களரி |
| இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல் |
| ஆட்பெறல் நசைஇ நாட்சுரம் விலங்கித் |
5 | துனைதரும் வம்பலர்க் காணாது அச்சினம் |
| பனைக்கான்று ஆறும் பாழ்நாட்டு அத்தம் |
| இறந்துசெய் பொருளும் இன்பந் தருமெனின் |
| இளமையின் சிறந்த வளமையும் இல்லை |