| இளமை கழிந்த பின்றை வளமை |
10 | காமந் தருதலும் இன்றே அதனால் |
| நில்லாப் பொருட்பிணிச் சேறி |
| வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே. |
(சொ - ள்.) நெஞ்சம் நல் இடம் பைங்காய் ஒரீஇய செங்காய்க் கருங்களி ஈந்தின் - நெஞ்சே! நல்ல மேலிடமெல்லாம் பசுங்காய் நிறமாறிச் செங்காயாகிப் பின்னர்க் கருங்களியாய் உதிர்கின்ற கனியையுடைய ஈத்த மரங்கள் மிக்க; வெண் புறக்களரி இடுநீறு ஆடிய கடு நடை ஒருத்தல் - வெளிய புறத்தினையுடைய களர்நிலத்திலே பட்ட புழுதிபடிந்த கடிய நடையையுடைய களிற்றியானை; ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி துனைதரும் வம்பலர்க் காணாது - நெறியிலே செல்லுபவரைக் கண்டு கொல்லுவதற்கு விரும்பி விடியற்காலத்தில் சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்று ஆங்கு விரைவில் வரும் அயலார் யாரையும் காணாது; அச் சினம் பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் - தான் கொண்டிருந்த அச் சினத்தைப் பனைமரத்தின் மோதி அப்பால் அடங்குகின்ற பாழ்த்த நாட்டினையுடைய பாலை நிலத்திலே; இறந்து செய்பொருளும் இன்பம் தரும் எனின் - சென்று ஈட்டப்படும் பொருளும் ஓரின்பத்தைத் தருமெனில், இளமையின் சிறந்த வளமையும் இல்லை - அதுதானும் இளமையில் நுகரும் காமவின்பத்தினுங்காட்டிற் சிறந்த இன்பமாமோ? இல்லையே! அங்ஙனமாக அத்தகைய வின்பத்தைத் தரும் வளமை சிறந்ததாகுமோ? இல்லையன்றோ! இளமை கழிந்தபின்றை வளமை காமந்தருதலும் இன்றே - அத்தகைய காமவின்பந்தான் இளமையிலேயே துய்க்கலாவதன்றி முதுமையின் கண்ணே துய்க்கப்படுவ தொன்றாகுமோ? இல்லையே! இளமைப் பருவத்தைப் பொருளீட்டுதலிலே கழித்துவிட்டாலோ அப் பொருள்வளம் முதுமையின்கண்ணே காமவின்பத்தைத் தருதற்கும் இயையுமோ? இல்லையே; அதனால் நில்லாப் பொருள் பிணிவல்லே சேறி நின் வினை வாய்க்க - ஆதலின் இவற்றை ஒருசேர ஆராய்ந்து நிலைநில்லாப் பொருளாசை நின்னைப் பிணித்தலாலே இக் காமவின்பத்தினைக் கைவிட்டு விரையச் செல்கின்றனை ஆயிற்சென்றுகாண்! நின் செயல் நினக்கு வாய்ப்புடைத்தாவதாக!; எ - று.
(வி - ம்.) களரி - உப்புப்பூத்த பாழ்நிலம். நீறு - புழுதி. வல்லே - விரைவாக.
ஈந்தின் பசுங்காய் பின்னர்ச் செங்காயாய்ப் பின்பு களியாயகனியாகுமென்றது, நமது யாக்கையின் இளமைபோய்ச் சிறிது முதிர்ந்து பின்பு