(து - ம்.) என்பது, இற்செறிக்கப்பட்ட தலைமகள் காவன் மிகுதியாலே தலைவனை அடையமுடியாமையைக் கருதிய தோழி, தலைவி கூறியதுபோலக் கூறுவாளாய்த் தலைவியை நோக்கி 'ஊருந் துயிலா நின்றது; யாருமில்லை; இக்காலத்து அவரை அடையப்பெறாதபடி இற்செறிப்புற்று அயலிலுங் காவலுடையதாகியதன்றி ஊர்க்காவலர் மணியும் ஒலியாநிற்குமாதலின், யான் பொன்றுநாள் இன்றுதானோ' வென அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குக், "காப்பின் கடுமை கையுற வரினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| பேரூர் துஞ்சும் யாரும் இல்லைத் |
| திருந்துவாய்ச் சுறவம் நீர்கான்று ஒய்யெனப் |
| பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி |
| போரமை கதவப் புரைதொறும் தூவக் |