பக்கம் எண் :


23


     (இ - ம்.) இதனை, 'தலைவரும் விழுமம்' என்னும் நூற்பாவின்கண்(தொல்-அக- 39.) போக்கற் கண்ணும் என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
விளம்பழங் கமழுங் கமஞ்சூழ் குழிசிப்  
    
பாசந் தின்ற தேய்கான் மத்த  
    
நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும்  
    
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கா  
5
லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
    
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்  
    
இவைகாண் தோறு நோவர் மாதோ  
    
அளியரோ வளியரென் னாயத் தோரென  
    
நும்மொடு வரவுதா னயரவுந்  
10
தன்வரைத் தன்றியுங1 கலுழ்ந்தன கண்ணே.  

     (சொ - ள்.) ) விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி - முடை தீர விளம்பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்த்தாழியில;் பாசம் தின்ற தேய்கால் மத்தம் நெய் தெரி இயக்கம் - கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினையுடைய மத்திட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால்; வெளில் முதல் முழங்கும் - தறியடியில் ஓசை முழங்குகின்ற; வைகுபுலர் விடியல் - தங்கிய இருள் தீரும் வைகறைப் பொழுதில்; மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு கழீஇ - தன்மெய் பிறர்க்குத் தோன்றாதபடி மறைத்துத் தன் காலிலணியும் பருக்கைக்கற் போகடப்பட்ட சிலம்பைக் கழற்றி; பல் மாண் வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள் - பல மாட்சிமைப்பட்ட வரிந்த புனைந்த பந்தோடு சேர ஓரிடத்தில் வைக்கச் செல்பவள்; இவை காண்தோறும் நோவர் அளியரோ அளியர் என - என் தோழிமார் இவற்றைக் காணுந்தோறும் நோவாநிற்பர், அவர் இரங்கத் தக்காரல்லரோ என்று கருதி; நும்மொடு தான் வரவு அயரவும் - நும்மோடு தான் வருதலை மேற்கொண்டொழுகா நிற்பவும்; கண் தன் வரைத்தன்றியும் கலுழ்ந்தன - அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்காமல் அழா நின்றன; ஆதலின் நுமக்கு ஏற்றவாறு செய்ம்மின்; எ - று.

     (வி - ம்.) குழிசி - தாழி. இயக்கம் - அசைவு. வெளில் - தயிர் கடைதற்கு நட்ட தூண். பகற்பொழுதிற் கடைவுழி வெப்பந் தாங்காது வெண்ணெய் உருகுமாதலின் வைகறையில் கடைதல் கூறிற்று.

    ஒலிகேட்டு அன்னை முதலானோர் விழித்தாற் போக்கிற்கியலாதென்பதுபற்றிச் சிலம்பு கழற்றினமை கூறினாள்.இதுகேட்டுச்

 (பாடம்) 1. 
கலிழ்ந்தன.