(து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த மறுநாள் தலைவியின் கண் சிவப்பு முதலாய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு ஏற்றினான் ஆயிற்றென்று வினாவிய தோழிக்கு மறைத்துக் கூறுதலானே அவள் தினைக்கதிரைக் கிளிகள் கொய்துகொண்டு போகவும் அவற்றை ஓட்ட நீ எழுந்தாயுமில்லை. இனி அழாதேனு மிருவெனக் கூறுவாள் போன்று இறைச்சியால் அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்து வைத்தேனெனப் பொருள் கொள்ளுமாறு தானுமறைத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.
| எழா அ யாகலி னெழில்நலந் தொலைய |
| அழா அ தீமோ நொதுமலர் தலையே |
| ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த |
| பகழி யன்ன சேயரி மழைக்கண் |
5 | இன்கடுங்1நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் |