(து - ம்,) என்பது, தலைவன் வரையாது நீட்டித்தலானே ஊரார் பழிதூற்றுவர் என்பதறிந்த தோழி சிறைப்புறத்தானாகிய அவன் கேட்டு வரையுமாற்றானே தலைவர் நம்மொடு நகைப்ப அவரது நகையை மெய்யெனக்கொண்டு கூடி இப்பொழுது அவர் அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது. அங்ஙனம் அவர் நகுவதன்முன் சீறூரினியதாயிருந்ததென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்' (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை |
| மாவரை புதைத்த மணன்மலி முன்றில் |
| வரையாத் தாரம் வருவிருந்து அயருந் |
| தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர் |