(து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே தோழிபால் தன்குறை கூறலும், அவள் மறுத்தனளாக, அதுபொறாத தலைமகன் மீண்டும் அவள் கேட்டுத் தன் குறைமுடிக்கு மாற்றானே தன் நெஞ்சை நோக்கி 'நெஞ்சமே பந்துவிளையாடி யேகுமவள் நமக்கு அருள் செய்யினும் அருளாது விடினும் நீ முனியாதே கொள;் யானுற்ற நோய்க்கு அவளன்றிப் பிறிதொரு மருந்து இல்லை'யென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தண்டாது இரப்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.
| கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த |
| சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் |
| வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் |
| புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் |