(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் தன்பால் மனைவி ஊடியதறிந்து ஊடல் நீங்குமாறு தேற்றவேண்டிப் பாணனை விடுப்ப வந்தானை நோக்கித் தோழி, 'பாண! நீ கூறும் பொய்மொழிகள் நலனிழந்த தலைவியினது நுதலினெழுந்த பசலையை நீக்க வல்லன அல்லகண்டாயாதலின், மீண்டு செல்வாயாக'வென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் குறைவினை எதிரும்" (தொல். கற்.
9) என்னும் விதிகொள்க.
துறை : (2) தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வினைவயிற்சென்ற தலைமகன் தன் வருகையை முன்னரே தெரிவிக்குமாறு தூதாகவிடுத்த பாணனைத், தோழி 'தலைவர் வந்து தலையளி செய்தாலன்றி நீ கூறும் இனியமொழி நலனிழந்த தலைவியினது