நுதலின் எழுந்த பசலையை நீக்குமோ?"வெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| கருங்கோட்டு்ப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை |
| விருந்தின்வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய் |
| வண்மகிழ நாளவைப் பரிசில் பெற்ற |
| பண்ணமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும் |
5 | தண்ணந் துறைவன் தூதொடும் வந்த |
| பயன்தெரி பனுவல் பைதீர் பாண |
| நின்வாய்ப் பணிமொழி களையா பன்மாண் |
| புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம் |
| மணங்கமழ் கானல் மாண்நலம் இழந்த |
10 | இறையேர் எல்வளைக் குறுமகள் |
| பிறையேர் திருநுதல் பாஅய பசப்பே. |
(சொ - ள்.) புன்னைக் குடக்கு வாங்கு கருங்கோட்டுப் பெருஞ்சினை விருந்தின் வெண்குருகு ஆர்ப்பு - புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய கிளையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல;் ஆஅய் வண்மகிழ் நாள் அவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும் - கடையெழு வள்ளலுள் ஒருவனாகிய ஆஅய் அண்டிரனது பெரிய மகிழ்ச்சியையுடைய நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அலங்காரமமைந்த நெடிய தேரினது ஒலிபோல ஒலியாநிற்கும்; தண் அம் துறைவன் தூதொடும் வந்த பயன்தெரி பனுவல் பைதீர் பாண - குளிர்ச்சியையுடைய துறையை உடைய கடற்கரைத் தலைவனாகிய காதலன் நின்னைத் தூதாக விடுத்தலினாலே வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கபடி கூறும் பனுவலையுடைய வருத்தமில்லாத பாணனே !; நின் வாய்ப் பணி மொழி - நின் வாயினாலே கூறப்படுகின்ற மெல்லிய பொய்ம்மொழிகள்; பல் மாண் புதுஞாழல் வீயொடு புன்னை தாஅம் மணம் கமழ் கானல் - பல மாட்சிமைப்பட்ட புதிய ஞாழன்மலரொடு புன்னைமலரும் உதிர்ந்து பரவிய மணம் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; மாண் நலம் இறை ஏர் எல் வளை இழந்த குறுமகள் - முன்பு நுகரப்பட்டுப் பின்பு தனது மாட்சிமையுடைய நலத்துடனே கையிலுள்ள அழகிய வளையும் இழந்த இளமை மாறாத மடந்தையினது; பிறை ஏர் திரு நுதல் பாய பசப்பு - பிறை போன்ற அழகிய நெற்றியிலுண்டாகிய