(து - ம்.) என்பது, தலைமகனாலே பிரிவறிவுறுத்தப்பட்ட தோழி தலைமகளை நோக்கி 'நம் காதலன் வினைவயிற் பிரிகின்றான் நம்மைக் கைவிட்டுச் சுரத்தின்கண்ணே சென்றக்கால் முன்பு அவனது மார்பிலே கிடந்து துயிலுங் கண்கள் இனி வேறெவ்வாறு உறங்கவல்லன் கொல்'லென அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) நூற்பாவின்கண் "பிறவும் வகைபடவந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
| வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் |
| நிலஞ்செலச் செல்லாக் கயந்தலைக் குழவி |
| சேரியம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
5 | ஊரான் கன்றொடு புகுதும் நாடன் |
| பன்மலை அருஞ்சுரம் இறப்பின் நம்விட்டு |
| யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் |
| வினைப்பூண் தெண்மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |