பக்கம் எண் :


329


    (து - ம்.) என்பது, இரவுக்குறி சென்று குறிமருண்டு இடையீடு படுதலாலே தலைவியை எய்தப்பெறானாய் நெஞ்சை நோக்கி முற்கூறியபடி கூறியதூஉமாம்.

    (இ - ம்.) இதற்கு, ""பரிவுற்று மெலியினும்"" (தொல். கள. 12) என்னும் விதிகொள்க.

     துறை : (3) இடைச்சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, வினைவயிற்சென்ற தலைமகன் சுரத்திடையே காதலியை நினைந்து மீண்டுவரக்கருதிய நெஞ்சைநோக்கி "அவளது இனிய நகை நோக்கி மகிழ்ந்தோய், அந்த மகிழ்ச்சி மேற்கொண்டு மீளுதலாலே நீ இங்ஙனமே துன்பெய்தி வாழ்வாயாக" வென்றதூஉமாகும். இதற்கு நிலம் பாலை. உரை மூன்று துறைகட்கும் பொருந்துமாறறிக.

    (இ - ம்.) இதற்கு, ""மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்,"" (தொல். கள. 5) என்னும் விதிகொள்க.

    
நோவினி வாழிய நெஞ்சே! மேவார் 
    
ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த் 
    
திதலை யெஃகிற் சேந்தன் தந்தை 
    
தேங்கமழ் விரித்தார் இயல்தேர் அழிசி 
5
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் 
    
அரியலங் கழனி ஆர்க்கா டன்ன 
    
காமர் பணைத்தோள் நலம்வீ றெய்திய 
    
வலைமான் மழைக்கண் குறுமகள் 
    
சில்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே. 

    (சொ - ள்.) நெஞ்சே மேவார் ஆர் அரண்கடந்த மாரிவண் மகிழத் திதலை எஃகின் சேந்தன் - நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தை தேம் கமழ் விரிதார் இயல்தேர் அழிசி - தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெல் இடை வண்டு மூசு நெய்தல் மலரும் - நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன - தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த "ஆர்க்காடு" என்னும் ஊரையொத்த; காமர் பணைத்தோள் நலம் வீறு எய்திய வலைமான் மழைக்கண் குறுமகள் - விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய