(து - ம்.) என்பது, களவொழுக்கத்து வரையாது வந்தொழுகுந் தலைமகன் ஒருகால் மறைந்துவந்து உறைவதனை யறிந்த தோழி தலைவியை இல்வயிற்செறித்தனரென்பதனை அவன் கேட்டு விரைய வரைவொடு வருமாறு தலைவியை நோக்கி நாம் வெற்பனொடு தமியேமாகி விளையாடும்பொழுது தினைக்கதிரை அழிக்காதொழிந்த யானைக்கும் கிளிகட்கும் கைம்மாறு யாது செய்யவல்லாம் இப்பொழுது இல்வயிற்செறித்தமையால் அவை கொள்வனபோலுமென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ""களனும் பொழுதும்........................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.
| அம்ம வாழி தோழி கைம்மாறு |
| யாதுசெய் வாம்கொல் நாமே கயவாய்க் |
| கன்றுடை மருங்கிற் பிடிபுணர்ந் தியலும் |
| வலனுயர் மருப்பின் நிலன்ஈர்த் தடக்கை |
5 | அண்ணல் யானைக்கு அன்றியும் கல்மிசைத் |
| தனிநிலை இதணம் புலம்பப் போகி |
(பாடம்) 1. | மருதைப்பெருமங்கன் இளநாகனார். |