(து - ம்.) என்பது, தலைமகன் களவுப்புணர்ச்சியிலே நீட்டிப்ப ஆற்றாத தோழி உள்ளுறையால் வரைந்தெய்துமாறு கடாவுவாளாய்க் குறிப்பால் அவனை நோக்கிப் புலம்பனே! நீ விரும்பிய காதலியினுடைய கண்கள் மாறாது கலுழாநிற்கும்; அதனை யான் கண்டிருக்கின்றேனாதலின், நீ அவளை வரைந்து முயங்கியருளினாயல்லை; அங்ஙனம் அருளாமையானது கொடிதுகாணென வெகுண்டு கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய இலக்கணமே அமையும்.
| அருளா யாகலோ கொடிதே இருங்கழிக் |
| குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித் |
| 1 தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும் |
| மெல்லம் புலம்ப யான்கண் டிசினே |
5 | கல்லென் புள்ளின் கானலந் தொண்டி |
| நெல்லரி தொழுவர் கூர்வா ளுற்றெனப் |
| பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
| நீரலைத் தோற்றம் போல |
| ஈரிய கலுழுநீ நயந்தோள் கண்ணே. |
(சொ - ள்.) இருங் கழி நீர் நாய்க் குருளை - கரிய கழியின் கணுள்ள நீர்நாயின் குருளை; கொழுமீன் மாந்தித் தில்லையம் பொதும்பில் பள்ளிகொள்ளும் - கொழுவிய மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரப் பொந்துகளிலே பள்ளிகொள்ளா நிற்கும்; மெல்லம் புலம்ப - மெல்லிய கடற்கரையின் தலைவனே!; கல் என்
(பாடம்) 1. | திதலையம்; தில்லைப். |