பக்கம் எண் :


364


யாணர் ஊர - புதுவருவாயினையுடைய ஊரனே!; நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று - அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; தன் செய்வினைப் பயனே - அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்; சான்றோர் செல்வம் என்பது - இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பது - தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்; அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்? எ - று.

     (வி - ம்.) வட்டி - கடகப்பெட்டி.

     நெடியமொழிதலும் கடியவூர்தலும் களவுக்காலத்தே தலைவன் வந்து கூறி நிகழ்த்தியவை; அவற்றை ஈண்டுக் குறிப்பித்தது நீ அத்தகையை யல்லை என்பாள், நின்னைப் புகலிடமாக அடைந்த தலைவியைக் கைவிட்டனை என்பதனாலே பின்னர்க் குறிப்பித்தாள்.

     உள்ளுறை:- தாளடியில் விதைக்குமாறு விதையொடு சென்ற வட்டி மீனொடு பெயருமென்றது, தலைவியொடு இல்லறம் நிகழ்த்துகின்ற நின்பால் வேண்டிய பரத்தையரைக் கொணர்ந்து புணர்த்திய பாணன் தான் விரும்பும் பொருளை நின்னிடத்துப் பெற்றுச் செல்லா நிற்கும்; அந்த மயக்கிலிருக்கின்ற நின்னைக் கூறியாவதென் என்றதாம். மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய வெகுளி. பயன் - வாயில் நேர்தல்.

     (பெரு - ரை.) செல்வம் சாதியொருமையாய் அன்றென்னும் ஒருமை முடிபேற்றது. மென்கண் செல்வம் என்றது கண்ணோட்டத்தை. சான்றோர் செல்வம் என்பது மென்கண் செல்வத்தையேயாம். ஆதலால் அதுவே சிறந்த செல்வம் என்று கருதப்படும் என்று உரை விரித்திடுக.

(210)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவுநீட ஒருதலை ஆற்றளா மென்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவொழுக்க மேற்கொண்ட தலைமகன் மணஞ்செய்து கொள்ளாது நீட்டித்தலாலே தலைவி ஒருபடியாக ஆற்றாளாமென்று அறிந்த தோழி, ஆங்கு ஒருபுறம் வந்திருந்த தலைவன்