(து - ம்.) என்பது, தலைமகனாலே தலையளி செய்யப்பட்ட காதற் பரத்தை அவனுக்கு அறிவுறுத்துமாற்றால் அத் தலைவிக்குப் பாங்காயுள்ளோர் கேட்ப முற்கூறிய அவ்விருவரில் ஒருவரைநோக்கி "இன்ப நுகராவிடினும் அவரைக் காணுதல் இனிதேயாம்; அவரில்லாதவூர் இன்னாதாகு"மென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் வரும் "இவற்றொடும் பிறவும்" என்பதனால் அமைத்துக் கொள்க.
| துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும் |
| இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் |
| கண்ணுறு விழுமங் கைபோல் உதவி |
| நம்முறு துயரங் களையா ராயினும் |
5 | இன்னா தன்றே அவரில் ஊரே |
| எரிமருள் வேங்கைக் கடவுள் காக்குங் |
| குறுகார் கழனியின் இதணத்து ஆங்கண் |
| ஏதி லாளன் கவலை கவற்ற |
| ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக் |
10 | கேட்டோ ரனையா ராயினும் |
| வேட்டோ ரல்லது பிறரின் னாரே. |