பக்கம் எண் :


38


    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, சென்று பொருள் செயல் வினைமுடித்து மீளுந் தலைமகன் தேர்ப்பாகனை நோக்கி 'வலவ, நம் மழவர் பின்னே வருவாராக; நீ விரைந்து தேரைச் செலுத்து; கானவாரணம் இரையைப் பெற்றுப் பெடையை நோக்குகின்றதனைப் பாராய்' என யாமும் அங்ஙனம் தலைவியை நோக்கி மகிழ்வேமென்னுங் குறிப்புப்படக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க

    
விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர் 
    
அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ 
    
வேண்டமர் நடையர் மென்மெல வருக 
    
தீண்டா வைமுள் தீண்டி நாஞ்செலற் 
5
கேமதி வலவ தேரே உதுக்காண் 
    
உருக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன 
    
அரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக் 
    
காமரு தகைய கான வாரணம் 
    
பெயனீர் போகிய வியனெடும் புறவிற் 
10
புலரா வீர்மணன் மலிரக் கெண்டி 
    
நாளிரை கவர மாட்டித்தன்  
    
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே. 

    (சொ - ள்.) வலவ விரைப் பரிரி வருந்திய வீங்கு செலல் இளையர் - பாகனே ! விரைந்து செல்லுதலாலே வருந்திய மிக்க செலவினையுடைய நம் வீரர்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மெல்மெல வருக. இடையிற் செறித்த கச்சையின் பிணிப்பை நெகிழ்த்து ஆங்காங்குத் தங்கித் தாம் தாம் விரும்பிய வண்ணம் அமர்ந்த நடையராய் மெல்ல மெல்ல வருவாராக; உருக்குறு நறுநெய் பால் விதிர்த்து அன்ன அரிக்குரல் மிடற்ற அம் நுண்பல் பொறிக் காமரு தகையகான வாரணம் - உருக்கலுற்ற நறிய நெய்யிற் பாலைச் சிதறினாற் போன்ற கடைகின்ற குரலையுடைய மிடற்றினையுடைய அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளமைந்த கண்டார்க்கு விருப்பம் வரும் தகுதிப்பாட்டினையுடைய கானங்கோழி; பெயல்நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர்மணல் மலிரக்கெண்டி - மழை பெய்தநீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிலே சுவறாத ஈரமணலை