(து - ம்.) என்பது, களவொழுக்கந் தவிர்ந்து வரைந்துகொள்ள வேண்டித் தலைமகன் வரக்கண்ட தோழி சென்று தலைவியை நோக்கித் தினைவிளைகாலம் வதுவைக்கேற்ற பொழுதாயினும், வம்பமாரி இடையிலே பெய்வதுகண்டு நீ வருந்த, அப்பொழுது வருவனென்று யான் கூறியமொழி பொய்க்கும்படி அவன் வாரானாயினும், இப்பொழுது மெய்யாகவே மணஞ்செய்துகொள்ள வந்தனனென்று மகிழ்ந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க
| கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
| முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி |