(து - ம்.) என்பது, அங்ஙனம் வந்துமீளுந் தலைமகனைத் தோழி இவள் நின்பால் அன்புடையளாதலிற் பகலும் வருகின்றனை, இங்கு நீ வந்துபோவதனை எங்கள் ஐயன்மார் அறியின் இல்வயிற் செறிப்பராதலின், இரவில் வருவாயாக என்று கூறினவள் அவ்வண்ணம் நீ இரவில் வருவதற்கும் இவ்வூர் துறையின்கண்ணே இரவிலுந் துயிலாத அம்பற்பெண்டிரையுடையதா யிராநின்றதென அதனையு மறுத்து வரைவு தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முன் செய்யுட்குக் கூறிய விதியேயாம்.
| இவள்தன், காமம் பெருமையிற் காலையென்னாள்நின் |
| அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப |
் | பகலும் வருதி பல்பூங் கானல் |
| இந்நீ ராகலோ இனிதால் எனின்இவள் |
5 | அலரின் அருங்கடிப் படுகுவள் அதனால் |
| எல்லி வம்மோ மெல்லம் புலம்ப |
| சுறவினங் கலித்த நிறையிரும் பரப்பின் |
| துறையினுந் துஞ்சாக் கண்ணர் |
| பெண்டிரும் உடைத்திவ் வம்பல் ஊரே. |
(சொ - ள்.) மெல்லம் புலம்ப இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் அன்பு பெரிது உடைமையின் - மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்;