(து - ம்.) என்பது, தலைவன் பிரிந்ததனைத் தோழி தலைவிக்குத் தெரியக் கூறி மீட்டும் வினாவக் கேட்டு வருந்தி அன்பின் மிக்க பெரியராய் நின்னை நீங்ககிலேம் என்று தேற்றிச் சுரத்தின்கண்ணே சென்ற நம் காதலர் திறத்து யான் இனி மொழிவது யாதென நொந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு ''அவனறிவு ஆற்ற அறியுமாகலின்'' (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண் ''ஆவியின் வரூஉம் பல்வேறு நிலையினும்'' என்னும் விதிகொள்க.
| அன்பினர் மன்னும் பெரியர் அதன்றலைப்் |
| பின்பனி அமையம் வருமென முன்பனிக்் |
| கொழுந்து முந்துறீஇக் குரவுஅரும் பினவே் |
| புணர்ந்தீர் புணர்மி னோவென இணர்மிசைச் |
5 | செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் |
| இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின் |
| பிரியல மென்று தெளித்தோர் தேஎத்து் |
| இனியெவன் மொழிகோ யானே கயனறக் |
| கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி் |
10 | வினைமூசு கவலை விலங்கிய் |
| வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே.் |
(சொ - ள்.) அன்பினர் மன்னும் பெரியர் - நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்தலை அமையம் பின்பனி வரும் என முன்பனிக் கொழுந்து முந்துறீஇ - அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குரவு அரும்பின-குராமரம் அரும்பு கட்டின; இணர் மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் - மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; ஓ புணர்ந்தீர் புணர்மின்ன - 'ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்!' என்று; குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று - தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற்