(து - ம்.) என்பது, மணஞ்செய்துகொள்ளாது களவுப்புணர்ச்சியே, கருதிவந்து ஒழுகுந் தலைமகனைத் தோழி குறியிடத்துச்சென்று தொழுது முன்நின்று நின்னால் அருளிப்பாட்டொடுசெய்த தலையளிதான் பலரானும் அறியப்பட்டு அலராயிற்று, இனி இவள் இறந்துபட்டொழியினும் இப்பொழுது உண்டாகிய பழிச்சொல் நீங்குவதொன்றன்று, இன்னாமையுடையதுகாண் என வரைவுதோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ''களனும் பொழுதும்.....அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.
| அறிந்தோர் அறனிலர் என்றலர் சிறந்த |
| இன்னுயிர் கழியினும் நனியின் னாதே |
| புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த |
| பின்ஈர் ஓதியென் தோழிக்கு அன்னோ |
5 | படுமணி யானைப் பசும்பூண் சோழர் |
| கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் |
| கள்ளுடைத் தடவின் புள்ளொலித்து ஓவாத் |
| கௌவையா கின்றது ஐயநின் அருளே. |
(சொ - ள்.) ஐய புன்னை அம்கானல் புணர்குறி வாய்த்தபின் ஈர்ஓதியென் தோழிக்கு - ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; அன்னோ நின் அருள் படுமணி யானைப் பசும்பூண் சோழர் - ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய